Saturday 31 December 2011

திரு .சோமு.செல்வேந்திரன் (ரவி அண்ணா) அமரரின் ........!

இவரின் தந்தையார் சோமசுந்தரம்,தாயாரின்முளுப்பெயர் தெரியவில்லை.ஆனால் சின்னக்கிளி அக்கா என அனைவரும் அன்பாக அழைப்பது எனக்குத்தெரியும்.

ரவி அண்ணா 1955 இல் பிறந்திருப்பார் என்றுநினைக்கிறேன்.குடும்பத்தில் இவர்தான் மூத்தபுதல்வன்,இவரது உடன்பிறப்புக்கள் ஒரு தங்கையும்,தம்பியும் ஆகும்.

நல்ல அன்பு உள்ளங்கொண்டவர்.வயது வித்தியாசமின்றி நண்பர்களுடன் இனிதே,நகைச்சுவையுடன்,தோழமையாக பழகுவதிலும்,நண்பர்களிற்கு ஏதாவது ஆபத்து,சுகதுக்கம் என்றால் தளராது எந்த இடத்தில் என்று பாராது மிகவும் துணிச்சலாக,சுறுசுறுப்பாக ஈடுபடுவார்.

நல்லதோர் கலைஞன் மிகத்திறமையாகப் படங்கள் வரைவதிலும்,முத்துப் போன்ற எழுத்துக்களாலும் சகமாணவரைக் கவர்ந்த மாணவன்.மாணவப்
பருவத்தில் குறும்புகள் செய்வதில் அலாதிப் பிரியங்கொண்டவர்.

பட்டக்காலத்தில் ஒழுங்காக வடிவமைக்கப் பட்ட அழகான பட்டங்கள் ஏற்றுவார். ஊரினது போது வைபவங்களிற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதில் என்றுமே பின்னின்றதே இல்லை.

நாட்டிலேற்பட்ட அசாதாரண வாழ்க்கையின் போது இவரின் வாழ்க்கையிலும் நிறையவே விபரீதங்கள் நடந்தேறின. அதனால் உள,உடற்பாதிப்புக்களை அடைந்தது நான் நன்கறிவேன்.

பின்பு 1985 ஆண்டளவில் இவரிற்கும் பொலிகண்டி என்னும் இடத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிற்கும் திருமணம் நடைபெற்றது என்பதும் தெரியும்.1990களின் நடுப்பகுதியில் என்று நினைக்கிறேன் தாயக விடுதலைக்காக தனது கடமையைச் செய்து கொண்டிருந்த போது தாயகத்திற்காக வித்தானார்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.ரவி அண்ணாவிற்குச் சமர்ப்பணம்.ஏதாவது தவறுகள்,பிழைகள் இருந்தால் உண்மையான தகவல்களை பின்வரும் மினஞ்சலிற்கு தந்து உதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றிகள்.

(மினஞ்சல் முகவரி lvadaakkai@gmail.com என்பதாகும்)

Wednesday 28 December 2011

எமது ஊரின் ஆணிவேர்கள்


எமது ஊரின் அனைத்துச் செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்து.
இப்போது எமது இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் எமது நண்பர்களை.


ஆவணப் படுத்துவதே இவ்விணையத்தின் முக்கிய நோக்கமாகும்.
அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

நன்றிகள் தொடரும்