Wednesday, 14 March 2012

மரண அறிவித்தல் !

தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகக் கொண்ட திருவாளர் முருகேசு (தாமோதரம்பிள்ளை) தணிகாசலம் அவர்கள்(14/03/12) இன்றுமாலை காலமாகிவிட்டார். 

இவர் காலம் சென்றவர்களான முருகேசு (தாமோதரம்பிள்ளை) தங்கக்கிளி தம்பதியினரின் அன்புமகனும் ஜெயலட்சுமியின் அன்புக் கணவருமாவர். இவருடைய ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

தொடர்புகளிற்கு 00442088686305

Thursday, 19 January 2012

முதலாவது ஆண்டு நினைவாஞ்சலி.........!

முதலாவது ஆண்டு நினைவஞ்சலி.....!
அமரர் ரத்தினம் பிறேமரத்னம் (மல்லி அண்ணா) அவர்களின்!



மனிதரில் மாணிக்கமாய் மாந்தருள் திலகமாய்
புனித வாழ்வு வாழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
காத்திருந்து அரவணைத்த கைகள்
காலமெல்லாம் எம்மை விட்டுப் பிரிந்ததேனோ?
மலர்ந்த வதனச் சிரிப்பை வாழ் நாளில்
காணக்கிடைக்குமா? 



அவரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம். 
அவரின் பிரிவால் துன்புறும்
மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்
தொண்டைமானாறு மக்கள்








மண்ணில் :08/11/1954
விண்ணில் :22/01/2011











Sunday, 15 January 2012

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

வணக்கம்!

அனைத்து ஊர்ப்பிறந்த நண்பர்களிற்கும்!





இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!


நன்றிகள்.

Sunday, 1 January 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தொண்டைமானாற்றை பூர்வீகமாக
கொண்ட அனைவரிற்கும்!


என் இனிய வணக்கங்கள்!
நல்வாழ்த்துக்கள்!
நன்றிகள்.

Saturday, 31 December 2011

திரு .சோமு.செல்வேந்திரன் (ரவி அண்ணா) அமரரின் ........!

இவரின் தந்தையார் சோமசுந்தரம்,தாயாரின்முளுப்பெயர் தெரியவில்லை.ஆனால் சின்னக்கிளி அக்கா என அனைவரும் அன்பாக அழைப்பது எனக்குத்தெரியும்.

ரவி அண்ணா 1955 இல் பிறந்திருப்பார் என்றுநினைக்கிறேன்.குடும்பத்தில் இவர்தான் மூத்தபுதல்வன்,இவரது உடன்பிறப்புக்கள் ஒரு தங்கையும்,தம்பியும் ஆகும்.

நல்ல அன்பு உள்ளங்கொண்டவர்.வயது வித்தியாசமின்றி நண்பர்களுடன் இனிதே,நகைச்சுவையுடன்,தோழமையாக பழகுவதிலும்,நண்பர்களிற்கு ஏதாவது ஆபத்து,சுகதுக்கம் என்றால் தளராது எந்த இடத்தில் என்று பாராது மிகவும் துணிச்சலாக,சுறுசுறுப்பாக ஈடுபடுவார்.

நல்லதோர் கலைஞன் மிகத்திறமையாகப் படங்கள் வரைவதிலும்,முத்துப் போன்ற எழுத்துக்களாலும் சகமாணவரைக் கவர்ந்த மாணவன்.மாணவப்
பருவத்தில் குறும்புகள் செய்வதில் அலாதிப் பிரியங்கொண்டவர்.

பட்டக்காலத்தில் ஒழுங்காக வடிவமைக்கப் பட்ட அழகான பட்டங்கள் ஏற்றுவார். ஊரினது போது வைபவங்களிற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதில் என்றுமே பின்னின்றதே இல்லை.

நாட்டிலேற்பட்ட அசாதாரண வாழ்க்கையின் போது இவரின் வாழ்க்கையிலும் நிறையவே விபரீதங்கள் நடந்தேறின. அதனால் உள,உடற்பாதிப்புக்களை அடைந்தது நான் நன்கறிவேன்.

பின்பு 1985 ஆண்டளவில் இவரிற்கும் பொலிகண்டி என்னும் இடத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிற்கும் திருமணம் நடைபெற்றது என்பதும் தெரியும்.1990களின் நடுப்பகுதியில் என்று நினைக்கிறேன் தாயக விடுதலைக்காக தனது கடமையைச் செய்து கொண்டிருந்த போது தாயகத்திற்காக வித்தானார்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.ரவி அண்ணாவிற்குச் சமர்ப்பணம்.ஏதாவது தவறுகள்,பிழைகள் இருந்தால் உண்மையான தகவல்களை பின்வரும் மினஞ்சலிற்கு தந்து உதுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றிகள்.

(மினஞ்சல் முகவரி lvadaakkai@gmail.com என்பதாகும்)