ohinthaintha
நெஞ்சம் விட்டகலாத நண்பர்களிற்கு காணிக்கை...
Monday, 31 December 2012
Sunday, 23 December 2012
Wednesday, 2 May 2012
அமரர் மு. நவரத்தினசாமி அவர்கள்................!
தொண்டமனாற்றைப் பூர்வீகமாகக் கொண்டவர், முதன்முதலாக பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் என்ற பெருமை இவரிற்கே சாரும்.
நன்றிகள்.
அமரர் க.துரைரத்தினம் அவர்கள்..................!
இவரது பூர்வீகம் தொண்டமானாறு, முன்னைநாள் தமிழரசுக்கட்சியினது பருத்தித்துறைத் தொகுதிப் பாராளமன்ற உறுப்பினர் அமரர் க.துரைரத்தினம் அவர்கள்.
தனது கட்சியினது கொள்கைக்காவே இறுதிவரை கொள்கைமாறாது பாராளமன்ற உறுப்பினராகவே கடமையாற்றியவர். இவரது எளிமையான வாழ்க்கை, பதவிப் பெருமையற்று மிகச்சாதாரணமாகவே மக்களின் தேவைகளிற்கு தயங்காது உழைத்ததால் "ஏழைகளின் நண்பன்" என மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரினது பாராளுமன்றக் காலத்தில் இலங்கையின் வடக்கு மாகாண, கிழக்கு மாகாண மக்களின் விவசாய மேம்பாட்டிற்காக நிறையவே உழைத்தார் என்பதற்கொர் உதாரணம்.
ஒருமுறை இசுரேல் நாட்டிற்கு அரசியல் சுற்றுலாச் சென்று போது அந்த நாட்டின் காலநிலையும் இலங்கையின் குறிப்பாகத் தமிழர் வாழுகின்ற இடங்களின் காலநிலையை ஒத்ததாக இருந்ததால் இலங்கையில் திராட்சை உற்பத்தியை மனதிற்கொண்டு.
இசுரேலின் நாட்டின் அரசியல் சுற்றுலாமுடிந்து திரும்பும்போது திராட்சை உற்பத்தியும், அதற்கான வேலைத்திட்டங்களையும் நன்கு தயார்செய்ததோடு, திராட்சை மரக்கன்றுகளையும் கையேடு எடுத்து வந்து பலரிற்கு விநியோகம் செய்து.
திராட்சை உற்பத்தியின் செய்முறையைப் பற்றிய விளக்கத்தையும் கொடுத்து இலங்கையின் திராட்சையின் உற்பத்திக்கு "முன்னோடியாக"த் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றிகள்.
Thursday, 12 April 2012
Wednesday, 14 March 2012
மரண அறிவித்தல் !
தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகக் கொண்ட திருவாளர் முருகேசு (தாமோதரம்பிள்ளை) தணிகாசலம் அவர்கள்(14/03/12) இன்றுமாலை காலமாகிவிட்டார்.
இவர் காலம் சென்றவர்களான முருகேசு (தாமோதரம்பிள்ளை) தங்கக்கிளி தம்பதியினரின் அன்புமகனும் ஜெயலட்சுமியின் அன்புக் கணவருமாவர். இவருடைய ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளிற்கு 00442088686305
Sunday, 11 March 2012
Subscribe to:
Posts (Atom)