Wednesday 2 May 2012

அமரர் க.துரைரத்தினம் அவர்கள்..................!


இவரது பூர்வீகம் தொண்டமானாறு, முன்னைநாள் தமிழரசுக்கட்சியினது பருத்தித்துறைத் தொகுதிப் பாராளமன்ற உறுப்பினர் அமரர் க.துரைரத்தினம் அவர்கள்.

தனது கட்சியினது கொள்கைக்காவே இறுதிவரை கொள்கைமாறாது பாராளமன்ற உறுப்பினராகவே கடமையாற்றியவர். இவரது எளிமையான வாழ்க்கை, பதவிப் பெருமையற்று மிகச்சாதாரணமாகவே மக்களின் தேவைகளிற்கு தயங்காது உழைத்ததால் "ஏழைகளின் நண்பன்" என மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரினது பாராளுமன்றக் காலத்தில் இலங்கையின் வடக்கு மாகாண, கிழக்கு மாகாண மக்களின் விவசாய மேம்பாட்டிற்காக நிறையவே உழைத்தார் என்பதற்கொர் உதாரணம்.

ஒருமுறை இசுரேல் நாட்டிற்கு அரசியல் சுற்றுலாச் சென்று போது அந்த நாட்டின் காலநிலையும் இலங்கையின் குறிப்பாகத் தமிழர் வாழுகின்ற இடங்களின் காலநிலையை ஒத்ததாக இருந்ததால் இலங்கையில் திராட்சை உற்பத்தியை மனதிற்கொண்டு.

இசுரேலின் நாட்டின் அரசியல் சுற்றுலாமுடிந்து திரும்பும்போது திராட்சை உற்பத்தியும், அதற்கான வேலைத்திட்டங்களையும் நன்கு தயார்செய்ததோடு, திராட்சை மரக்கன்றுகளையும் கையேடு எடுத்து வந்து பலரிற்கு விநியோகம் செய்து.

திராட்சை உற்பத்தியின் செய்முறையைப் பற்றிய விளக்கத்தையும் கொடுத்து இலங்கையின் திராட்சையின் உற்பத்திக்கு "முன்னோடியாக"த் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றிகள்.

No comments:

Post a Comment

ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன